கேரள கஞ்சாவுடன் புத்தளம் மாநகர சபை உறுப்பினர் கைது
புத்தளம் திலதியா பகுதியில் கேரள கஞ்சாவைக் கடத்திச் சென்றதாகக் கூறப்படும் புத்தளம் மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர், பொலிஸ் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (18) பிற்பகல் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போது, திலதியா பகுதியிலிருந்து புத்தளம் நகருக்கு மோட்டார் சைக்கிளில் கேரள கஞ்சாவைக் கடத்திச் சென்றதாகக் கூறப்படும் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நகுலேஸ்வரன், ஸ்ரீலங்கா முஸ்லிம் கட்சியின் வேட்பாளராகவும் செயற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் மோட்டார் சைக்கிள் ஆகியவை இன்று (19) புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேகநபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றன.