7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை இன்று மாலை வரை நீடிப்பு
7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. குறித்த எச்சரிக்கை இன்று மாலை 6 மணி வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, பதுளை மாவட்டத்தில் ஹப்புத்தளை, ஹல்துமுல்லை மற்றும் பசறை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும்,
கண்டி மாவட்டத்தில் அக்குரணை, தும்பனே, உடதும்புற, தெல்தொட்ட, பன்வில, பூஜாபிட்டிய, உடுநுவர, உடபலாத்த, யட்டிநுவர, ஹரிஸ்பத்துவ, மெததும்புர மற்றும் ஹத்தரலியத்த ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும் முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேகாலை மாவட்டத்தில், தெஹியோவிட்ட, கேகாலை, வரக்காபொல, ரம்புக்கனை மற்றும் ருவான்வெல்ல, ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கையும் யட்டியாந்தோட்டை, மாவனெல்லை, புலத்கொஹுபிட்டிய,, அரநாயக்க, ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
குருநாகல் மாவட்டத்தில் ரிதிகம ஆகிய பிரதேச செயலக பிரிவுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாத்தளை மாவட்டத்தில், உக்குவெல, மாத்தளை, அம்பகங்ககோரளை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கும் முதலாம் நிலையும், ரத்தோட்டை பிரதேச செயலக பிரிவுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில், அம்பகமுவ பிரதேச செயலகத்துக்கு முதலாம் நிலை எச்சரிக்கையும், மதுரட்ட, ஹங்குராங்கெத்த, வலப்பனை, நில்தண்டாஹின்ன ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தில், கலவான, பலாங்கொட, அயகம, இம்புல்பே, வெலிகேபொல, எஹெலியகொட, கொலொன்ன, நிவித்திகல ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கையும், இரத்தினபுரி மாவட்டத்தில், எலபாத்த, குருவிட்டை, இரத்தினபுரி ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.