பொலிவுட் நடிகர் டைகர் ஷெராப் மீது துப்பாக்கிச் சூடு
மும்பையில் பொலிவுட் நடிகர் டைகர் ஷெராப்பை (Tiger Shroff) இலக்கு வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், அவர் எந்த வித காயங்களுமின்றி அதிர்ஷ்டவசமாக தப்பியுள்ளார்.
மும்பை ஜூஹூ (Juhu) பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்திற்கு அருகில் நேற்று மாலை (18) மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள், டைகர் ஷெராப் பயணித்த காரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் டைகர் ஷெராப்பின் கார் ஓட்டுநர் மற்றும் அருகிலிருந்த இருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நடிகர் டைகர் ஷெராப்பிற்கு எந்த வித காயங்களும் ஏற்படவில்லை என காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக மும்பை காவல்துறை 15 தனிப்படைகளை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருவதோடு, சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.