புத்தளத்தில் தாய் - மகனுக்கு நேர்ந்த பரிதாபம்! சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்
புத்தளம் மாவட்டம் ஈரட்டக்குளம் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் தாயும், மகனும் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் நேற்று (15-12-2021) புதன்கிழமை புத்தளம் மாவட்டம், மாதம்பை - ஈரட்டக்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மேலும், இவ்விபத்தில் கந்தானை களுவாஇருப்புவ பகுதியைச் சேர்ந்த 23 வயதான மகனும், 54 வயதான தாயும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து தெரியவருவதாவது, தாயும், மகனும் மோட்டார் சைக்கிளில் அநுராதபுரத்திற்கு சென்றுவிட்டு, மீண்டும் கந்தானை பகுதியை நோக்கிப் பயணம் செய்த போது மாதம்பை ஈரட்டக்குளம் பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் உள்ள பெரிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
விபத்தின் போது படுகாயமடைந்த இருவரையும் அங்கிருந்தவர்கள் உடனடியாக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் அவ்விருவரும் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மாதம்பை பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும் இவ்விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை மாதம்பை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பெதும் குமாரவின் ஆலோசனையில் போக்குவரத்து பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.