அநாதரவாக நகர மத்தியில் நின்ற இ.போ.ச. பேருந்து; காரணம் இதுதான்
ஹட்டன் பஸ் டிப்போவுக்கு சொந்தமான பஸ் ஒன்று நேற்று (16) காலை முதல் தலவாக்கலை நகர மத்தியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தலவாக்கலை - அட்டன் மார்க்கத்தில் சேவையில் ஈடுபட்ட பஸ் ஒன்று நேற்றைய தினம் காலை அதன் முன் பக்க டயர் பகுதியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக குறித்த இடத்திலேயே நிறுத்தப்பட்டது.

முன் பக்க டயர் பகுதியில் ஏற்பட்ட கோளாறு
அதன் போது பஸ்ஸில் பயணித்த பயணிகள் இவருக்கும் எவ்விதமான காயங்களோ பாதிப்புகளோ ஏற்படாத நிலையில் பாதுகாப்பாக இறக்கப்பட்டனர்.
இருப்பினும் இதுவரை குறித்த பஸ் பழுது பார்ப்பதற்காக கொண்டு செல்லாது தலவாக்கலை நகர மத்தியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் அட்டன் பஸ் டிப்போ அதிகாரி ஒருவரிடம் கூறுகையில், குறித்த பஸ் வண்டியை பழுது பார்ப்பதற்கு தேவையான சில தொகுதி உதிரி பாகங்கள் தம்மிடம் இருப்பில் இல்லை என்றும் நாளைய தினம் அவை கிடைக்கப்பெற்றதுடன், குறித்த இடத்திலிருந்து பஸ் அகற்றப்படும் என தெரிவித்தார்.