மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் எழுப்பியுள்ள பகிரங்கமான கேள்வி!
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது கைகாட்டி குற்றம் சாட்டுவோர் கடந்த காலத்தில் நடந்தவைகளை ஏற்றுக்கொள்வார்களா என்று அவரது சகோதரர் டட்லி சிறிசேன கேள்வியெழுப்பியுள்ளார்.
ஸ்டர் தின தாக்குதல் இடம்பெற்றமைக்கு ஜனாத்பதி மைத்திரிபால சிறிசேனவின் பொறுப்பற்றதனமே காரணம் என சொல்லப்படும் நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மைத்ரிபால சிறிசேனவின் பொறுப்பற்றதனத்தால் ஈஸ்ரர் தின தாக்குதல் நடந்ததாக வைத்துக்கொள்வோம்.
ஆனால் கடந்த 73 வருடங்களாக நாட்டு அரசியல் தலைவர்களின் பொறுப்பற்றதனத்தால் எவ்வளவு பாதிப்புகள் நடந்துள்ளன. அவற்றுக்கு யார் பொறுப்புக் கூறுவது ?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டபோதே டட்லி சிறிசேன மேற்கண்டவாறு கேள்வி எழுப்பியுள்ளார்.