வங்காள விரிகுடாவில் அர்னாப் சூறாவளி; இலங்கைக்கு அபாயம்
வங்காள விரிகுடாவில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், ‘அர்னாப்’ எனப் பெயரிடப்பட்ட மிகத் தீவிரமான சூறாவளியாக வலுப்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறித்த சூறாவளி, ஒக்டோபர் 28ஆம் திகதி இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம் மற்றும் யானம் கரையோரப் பகுதிகளில், பபட்லா மற்றும் விசாகப்பட்டினம் இடையே கரையைக் கடக்கக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இதன் மறைமுகத் தாக்கம் காரணமாக, இலங்கையின் தென்மேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் மழை மற்றும் காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனைக் கருத்திற்கொண்டு, வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு மீனவ மற்றும் கடற்படை சமூகத்தினருக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.