ஒருபக்கம் போராடும் தையிட்டி மக்கள்; மறுபக்கம் Nolimit இல் குவிந்த கூட்டம்; யாழின் இன்றைய பரிதாப நிலை!
யாழ்ப்பாணத்தில் தமது நிலங்களை மீட்க தையிட்டி மக்கள் இன்றும் போராட்டம் நடத்திவரும் நிலையில் மறுபக்கம் Nolimit இல் குவிந்த மக்கள் கூட்டம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
தமது பூர்வீக நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு பௌத்த விகாரை அமைக்கபட்டமை தொடர்பில் தையிட்டு மக்கள் ஒவ்வொரு பௌணமி தினத்திலும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பிளவுபட்டு நிற்கும் மக்கள் கூட்டம்
அந்தவகையில் இன்றும் தையிட்டியில் மக்கள் போராட்டம் இடம்பெற்று வரும் நிலையில் பெருமளவு பொலிஸார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
தையிட்டி மக்கள் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் பலக்லை மாணவர்களும் போராட்டட் களத்தில் இருக்கின்றனர். அதேசமயம் யாழ்ப்பாணத்தில் Nolimit திறப்பு விழா இன்று பெருமெடுப்பில் இடம்பெறுகின்ற நிலையில் தனை காண மக்கள் கூட்டம் கூடியுள்ளது.
அவர்களுக்கு தானே பிரச்சனை ...நமக்கென்ன வந்தது என்கின்ற யாழ் மக்களின் மனோநிலை கவலையளிப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.
மேலும் , ஒருகாலத்தில் போராட்டம் என வந்தால் ஒன்று திரண்ட மக்கள் கூட்டம், இன்று பிளவுபட்டு நிற்பது , இன்று யாழில் இடபெற்ற இந்த சம்பவங்கள் தெள்ளதெளிவாக எடுத்துரைப்பதாக சமூகவலைத்தள பதிவுகள் தெரிவிக்கின்றன.