தையிட்டி போராட்ட வழக்கு ஒத்திவைப்பு; மல்லாகம் நீதிமன்றம் உத்தரவு
யாழ்ப்பாணம் தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத விகாரை தொடர்பாக போராடியவர்களுக்கு எதிரான வழக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு விசாரணை இன்று (05) மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டபோதே வழக்கினை ஒத்திவைத்து நீதிவான் உத்தரவு பிறப்பித்தார்.

அதன்படி, குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் பெப்ரவரி 26 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது. தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத விகாரையான திஸ்ஸ விகாரைக்கு முன்பாக போராட்டம் நடத்தியபோது வேலன் சுவாமிகள் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், அவர்கள் சொந்தப் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கெள்ளப்பட்டது.
இதன்போது, வேலன் சுவாமிகள் உள்ளிட்டோருக்காக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், சட்டத்தரணி ஸ்ரீகாந்தா உள்ளிட்டோர் முன்னிலையாகியிருந்தனர்.