சிலகாலம் உறவு; காதலை மறுத்த யுவதியான ஆசிரியைக்கு இளைஞன் கொடுத்த ஷாக்!
களுத்துறை பிரதேசத்தில் காதலுக்கு மறுப்பு தெரிவித்தமையினால் கோபமடைந்த ஒருவர், ஆசிரியர் ஒருவரின் 64,000 ரூபாய் மதிப்புள்ள கைப்பேசியை திருடிச் சென்ற சம்பவமொன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர் .
சம்பவம் தொடர்பில் களுத்துறை, நாகொடையைச் சேர்ந்த 24 வயது ஆசிரியை ஒருவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

பேருந்தில் வந்தபோது தொலைபேசி பறிப்பு
கடந்த 3 ஆம் திகதி, விகாரைக்கு செல்ல மதுகம நகருக்கு பேருந்தில் வந்தபோது சந்தேகநபர்,கைப்பேசியை பறித்து தப்பிச் சென்றதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆசிரியை சந்தேகநபருடன் சிறிது காலமாக உறவில் இருந்ததாகவும், பின்னர் காதலுக்கு மறுப்பு தெரிவித்தமையினால் கோபத்தில் சந்தேக நபர் இவ்வாறு நடந்து கொண்டதாகவும் தெரியவந்துள்ளது.
இதன்போது ஆசிரியை உடலில் ஏற்பட்ட கீறல்கள் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, சந்தேக நபர் வந்த மோட்டார் சைக்கிள் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபரை கைது செய்ய மதுகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.