பெண் மீது அசிட் வீசியவரை தேடும் பொலிஸார்!
குருணாகலில் மாவத்தகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தில் பெண் ஒருவர் மீது அசிட் வீச்சு தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் தேடப்படும் சந்தேக நபரை கைதுசெய்வதற்கு மாவத்தகம பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.
சந்தேக நபர் பிரதேசத்தைவிட்டு தப்பிச் சென்று தலைமறைவாக உள்ளதால் பொதுமக்களிடம் உதவி கோரி, அவரின் புகைப்படங்களை பொலிஸார் தற்போது வெளியிட்டுள்ளனர்.

சந்தேக நபரின் விபரங்கள் ; பெயர் - அபேசிங்க தொன் மங்கல புஷ்பகுமார அபேசிங்க முகவரி - வெத்தாகல வடக்கு, கலவானை தேசிய அடையாள அட்டை இலக்கம் - 810532394V
இந்த புகைப்படத்தில் உள்ள சந்தேக நபர் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் மாவத்தகம பொலிஸ் நிலையத்தின் 071 - 8591258 அல்லது 037 - 2299222 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.