பதிவு செய்யப்படாத வாக்காளர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்
பல்வேறு காரணங்களினால் வாக்காளர்கள் பதிவு செய்யப்படாமையால், அவர்கள் தங்களது வாக்குரிமையை இழப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஹட்டன், டிக்கோயா நகரசபை மண்டபத்தில் இன்று நடைபெற்ற, தேர்தல் ஆணைக்குழுவின் இலத்திரனியல் சேவை தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வின் பின்னரே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டிலுள்ள வாக்காளர்கள் இலகுவாக தேர்தல் ஆணைக்குழுவின் சேவையை பெறும் வகையிலேயே, தற்போது இலத்திரனியல் சேவை முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் சனத்தொகைக்கு மேலதிகமாக, கையடக்கத் தொலைபேசி பாவனை அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே, அதனை பயன்படுத்தி அடிப்படை உரிமையான வாக்களிப்பு உரிமையினை பெறுவதற்கான பதிவுகளை மேற்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.