யாழ் பிரபல ஆலயத்தில் ரவுடிகளான பூசாரிகள்; மீண்டும் அடிதடி!
யாழ்ப்பாணம், நல்லூர் வீரமாகாளியம்மன் கோயில் அர்ச்சகரின் உறவினர்கள் 3 பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கோயில் பூசகரின் அண்ணன், மகன், சித்தப்பா ஆகியோரே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆலய நிவார்கத்தினருக்கும் , அர்ச்சர்களுக்கும் இடையில் நிலவி வரும் முரண்பாடு காரணமாக இடம்பெற்ற தாக்குதல் சம்பவமொன்று தொடர்பான முறைப்பாட்டையடுத்து, அவர்கள் விசாரணைக்காக பொலிஸ் நிலையம் அழைக்கப்பட்டதாக தெரியவருகின்றது.
ஐயரின் நெருங்கிய உறவு ஒருவர் உயிரிழப்பு
எனினும் அந்த விசாரணைக்கு செல்லாததையடுத்தே அவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
அதேவேளை வீரமாகாளியம்மன் ஆலயத்தின் மகோற்சவ நிகழ்வின் தொடக்கத்தில் கோயில் நிர்வாகியான ஐயரின் நெருங்கிய உறவு ஒருவர் வெளிநாட்டில் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், கோயில் ஐயர் திருவிழாவை தானே நடாத்தியதாக தெரியவருகின்றது.
அந் நேரத்தில் அங்குள்ள அன்னதான மண்டபத்தில் அன்னதானம் கொடுக்கும் போது கோயில் சிலர், அந்தமரணம் தொடர்பாக கேள்வி கேட்டு முரண்பட்ட போது அப்போதும் தாக்குதல் சம்பவம் நடைபெற்றதாகவும் தெரியவருகின்றது.
இந்நிலையில் மிகவும் ஆசாரமாக நடத்தவேண்டிய ஆலய திருவிழாவை , உறவினர் ம்ரணமடைந்தமை தெரித்தும் அர்ச்சகர் நடத்தியுள்ளமை பக்தர்கள் மனதில் ,சஞ்சலத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.