இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கும் விலைகள்!
இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் பால் மாவின் விலை அதிகரிப்பால் பால் தேநீர் உட்பட பால் சார்ந்த உணவுப்பொருட்களின் விலை அதிகக்கப்பட்டுள்ளது.
அதன்படி பால் தேநீர், பழச்சாறுகள், சீஸ் ஆகியவற்றின் விலைகள் 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என்று அகில இலங்கை சிற்றுண்டிசாலைகள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷனா ருக்ஷன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் அவர் கூறுகையில்,
அரிசிக்கு தட்டுப்பாடு
பால் மாவின் விலை உயர்வைக் கருத்தில் கொண்டு, பால் தேநீர் தவிர, பாலைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் அனைத்து வகையான பழச்சாறுகளின் ஒரு கோப்பையின் விலை இன்று நள்ளிரவு முதல் 10 ரூபாயால் அதிகரிக்கப்படும்.
இது தவிர, சீஸ், உள்ளிட்ட பல வகையான உணவுப் பொருட்களின் விலையும் ரூ.10 உயர்த்தப்படவுள்ளது.
அதேவேளை தற்போது கீரி சம்பா மற்றும் சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக உணவக உரிமையாளர்கள் கடுமையான சிரமங்களை எதிர்கொள்டு வருகின்றனர் என ஹர்ஷனா ருக்ஷன் தெரிவித்துள்ளார்.