அமைச்சுகளுக்கு ஜனாதிபதியின் செயலாளர் விடுத்துள்ள அதிரடி உத்தரவு!
நாட்டின் அனர்த்த நிலைமை தொடர்பில் அறிவிப்பதற்காக 117 என்ற துரித தொலைபேசி இலக்கம் 24 மணி நேரமும் செயற்படுத்தப்பட்டுள்ளதாகவும், அனர்த்த நிலைமைகளை எதிர்கொள்ள தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் (Ranil Wickremesinghe) உத்தரவின் பேரில், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளருக்கு, சம்பந்தப்பட்ட அமைச்சுகளுக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு அறிவித்துள்ளார்.
மேலும், சீரற்ற வானிலை காரணமாக மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு நிவாரணம் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதன்படி, சகல மாவட்டங்களிலும் உள்ள செயலாளர்களின் ஊடாக இதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு அரச நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர் மாயாதுன்னைக்கு அறிவுறுத்தியுள்ளார்.
அனர்த்த நிலைமைகளுக்கு முழுமையாக தயாராகி மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.