நடுவீதியில் பலியான பல்கலைக்கழக மாணவன் ; 25 வயது இளைஞனால் நடத்தப்பட்ட சம்பவம்
கடுகண்ணாவை - கொழும்பு பிரதான வீதியில் ஊராபொல சந்தியில் இடம்பெற்ற விபத்தில் பல்கலைக்கழக மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக கடுகண்ணாவை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று (28) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணை
விபத்தில் உயிரிழந்தவர் பேராதனை பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தில் கல்வி கற்று வந்த 24 வயதுடைய மாணவன் ஆவார்.
இந்த பல்கலைக்கழக மாணவன் பேராதனை பல்கலைக்கழகத்தை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுக்கொண்டிருக்கும் போது பாரவூர்தியில் மோதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து 25 வயதுடைய பாரவூர்தியின் சாரதி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கடுகண்ணாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.