இந்த வாரத்திற்குள் நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி உறுதிமொழி!

Sri Lanka Parliament Gotabaya Rajapaksa Sri Lanka Cabinet Sri Lankan political crisis
By Sulokshi May 12, 2022 05:11 AM GMT
Sulokshi

Sulokshi

Report

 இந்த வாரத்திற்குள்  நாடாளுமன்றில் பெரும்பான்மையை கொண்டுள்ள மற்றும் மக்களின் நம்பிக்கையை வென்ற ஒருவரை பிரதமராகவும், புதிய அமைச்சரவையையும் நியமிக்க , நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ  உறுதிமொழி வழங்கியுள்ளார்.

நேற்றிரவு நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்திய போதே, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், 

இன்று எமது நாடு அதன் வரலாற்றில் மிக மோசமான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.

இந்த நிகழ்விற்கு முன்னர் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் எதிர்கொண்ட சிரமங்களினால் சமூக மற்றும் அரசியல் உறுதியற்ற தன்மையை உருவாக்கியது.

இந்த பிரச்சினைகளுக்கு தீர்வாக, நாடாளுமன்றத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பான்மையான கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தி, புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான பொதுவான பிரேரணை பல்வேறு கட்சிகளினால் முன்வைக்கப்பட்டது.

கடந்த காலங்களில் இது தொடர்பாக பல்வேறு கட்சிகள் மற்றும் குழுக்களின் தலைவர்களுடன் பலமுறை கலந்துரையாடியுள்ளேன். நானும் அந்த ஆலோசனையை ஏற்று இந்த தீர்வுக்கு களம் அமைக்க சில கடினமான முடிவுகளை எடுத்தேன். கடந்த அமைச்சரவையை நியமிக்கும்போது அப்போது இருந்த பெருமளவிலான சிரேஷ்ட அமைச்சர்கள் மற்றும் ராஜபக்ஷக்கள் எவரும் இல்லாத இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட புதிய அமைச்சரவையும் நியமிக்கப்பட்டது.

அத்துடன், பிரதமர் பதவி விலகியதுடன், முழு அமைச்சரவையையும் கலைத்துவிட்டு, புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு இடமளிக்க உடன்பாடு எட்டப்பட்டது. ஆனால், மே மாதம் 9 ஆம் திகதி திங்கட்கிழமை காலை, நீங்கள் அனைவரும் அறிந்தபடி, மிகவும் துரதிர்ஷ்டவசமான சூழ்நிலை ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து மிகக் குறுகிய காலத்தில் நாடளாவிய ரீதியில் கலவரம் வெடித்தது.

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டு முப்படைகள் குவிக்கப்படுவதற்கு முன்னரே, இந்தச் செயற்பாடு நாடு முழுவதும் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் இடம்பெற்றது. சில மணி நேரங்களில், ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட சுமார் ஒன்பது பேர் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு கொல்லப்பட்டனர். அதேபோன்று சுமார் 300 பேர் வரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், ஏராளமான வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. நாடு முழுவதும் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றன இந்த நிகழ்வுகளுக்கு காரணமான முதல் சம்பவத்தை நான் பாரபட்சமின்றி வன்மையாகக் கண்டிக்கிறேன்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு காவல்துறை மா அதிபருக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அதைத் தொடர்ந்து நடந்த தொடர் கொலைகள், தாக்குதல்கள், மிரட்டல்கள், சொத்துக்கள் அழித்தல் உள்ளிட்ட இந்த கொடூரமான சம்பவங்களை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது.

இந்த சம்பவம் இடம்பெற்ற தருணத்திலிருந்து பாதுகாப்புச் செயலாளர், முப்படைகளின் பிரதானிகள், காவல்துறை மா அதிபர், புலனாய்வுப் பிரிவின் பிரதானிகள் மற்றும் பாதுகாப்புச் சபையின் பங்களிப்புடன் நாட்டில் அமைதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறேன்.

இந்த நிலையில், அனைத்து குடிமக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதே அரசின் முதன்மையான பொறுப்பு. எனவே, கலவரக்காரர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துமாறு முப்படையினர் மற்றும் காவல்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை திட்டமிட்டு, ஆதரித்த மற்றும் விளம்பரப்படுத்திய அனைவருக்கும் எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். எனவே இவ்வாறான நாசகார நடவடிக்கைகளில் இருந்து விலகிக்கொள்ளுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கின்றேன்.

இந்த நாட்டின் பொறுப்புள்ள குடிமக்கள் இதுவரை நடந்துள்ள உயிர் மற்றும் உடைமைச் சேதங்களை அவதானித்து, தொடர்ந்து வெறுப்பு உணர்வை பரப்பும் குழுக்களைக் கண்டிக்க வேண்டும். நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் செயற்படும் அதேவேளையில், நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் இணைந்து செயற்படுவேன்.

தற்போதைய சூழ்நிலையை கட்டுப்படுத்தவும், நாடு அராஜகத்திற்கு ஆளாவதை தடுக்கவும் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள அரசாங்கத்தின் செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுக்கவும் புதிய அரசாங்கத்தை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையினரின் நம்பிக்கையைப் பெறக்கூடிய மற்றும் நாட்டு மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தும் ஒரு பிரதமரையும் அமைச்சரவையையும் நியமிக்க இந்த வாரம் நான் நடவடிக்கை எடுத்து வருகின்றேன்.

அதன்பிறகு, 19ஆவது திருத்தச் சட்டத்தின் உள்ளடக்கங்களை மீண்டும் நிறைவேற்றும் வகையில், நாடாளுமன்றத்திற்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் வகையில், அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறேன். புதிய அரசாங்கத்தின் புதிய பிரதமருக்கு, புதிய வேலைத்திட்டத்தை முன்வைத்து நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும்.

ஜனாதிபதி முறைமையை நீக்குமாறு பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதிய அரசாங்கம் நாட்டை ஸ்திரப்படுத்தியதன் பின்னர் அனைவருடனும் கலந்துரையாடி அதனை நோக்கி செயற்படுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கும்.

இந்த இக்கட்டான தருணத்தில் நாடு வீழ்ச்சியடையாமல், மக்களின் உயிரையும், அவர்களின் உடைமைகளையும் பாதுகாப்பதற்கும், மக்களின் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான அனைத்தையும் வழங்குவதற்கும் அரச செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுக்கவும் எனக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் 2எனவும் அவர் கூறினார்.

மேலும் , இந்த சந்தர்ப்பத்தில் நாட்டு மக்கள் அனைவரையும் அமைதியாகவும், விவேகமாகவும் செயற்படுமாறும்  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இதன்போது  கோரிக்கை விடுத்துள்ளார்.

மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு, சென்னை, India, Toronto, Canada

14 Oct, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பரிஸ், France

17 Oct, 2014
மரண அறிவித்தல்

கொக்குவில், நல்லூர்

12 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், பூந்தோட்டம்

08 Oct, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
நினைவஞ்சலி

கஸ்தூரியார் வீதி, யாழ்ப்பாணம், நீர்வேலி

28 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, Brampton, Canada

12 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US