மூன்று முறை தங்கம் வென்ற இந்திய பாரா தடகள வீரர் உயிர் மாய்ப்பு
இந்திய பாரா தடகள வீரர் நீரஜ் யாதவ் (42) டெல்லியில் உள்ள தனது குடியிருப்பில் உயிர்மாய்த்துக் கொண்டதாக டெல்லி பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்திய பாரா தடகள வீரர் நீரஜ் யாதவ் டெல்லியில் உள்ள தனது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவரது மறைவை இந்திய பாரா தடகள அணியின் தலைமைப் பயிற்சியாளர் எஸ்.சத்யநாராயணா உறுதிப்படுத்தினார்.

ஊக்கமருந்து சோதனையில் தோல்வி
நீரஜ் யாதவ், ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் மூன்று முறை தங்கப் பதக்கம் வென்றவர் ஆவார்.
இந்நிலையில், ஊக்கமருந்து சோதனையில் தோல்வி அடைந்ததால் ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் தொழில்முறை பின்னடைவுகள் காரணமாக இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.