தாயகம் பிரியேன் தாய்மண்ணில் மரிப்பேன்... களமாடிய பிரபாகரனும்... நாடு கடக்க துடிக்கும் மஹிந்தவும்!
நான்கு பக்கம் மரணம் சூழ்ந்தபோதும் ‘தாயகம் பிரியேன் தாய்மண்ணில் மரிப்பேன்’ என்ற பிரபாகரத் தமிழனின் பேராண்மை எங்கே… ஊர் கொந்தளித்த ஒரே மாதத்தில் நாடு கடக்கத் துடிக்கும் ராஜபக்ச எங்கே…” என கவிஞர் வைரமுத்துவின் கவிதை சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியை அடுத்து வீதிக்கு இறங்கிய மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை காரணமாக இலங்கை கலவர பூமியானது.
நான்கு பக்கம்
— வைரமுத்து (@Vairamuthu) May 11, 2022
மரணம் சூழ்ந்தபோதும்
'தாயகம் பிரியேன்
தாய்மண்ணில் மரிப்பேன்' என்ற
பிரபாகரத் தமிழனின்
பேராண்மை எங்கே...
ஊர் கொந்தளித்த
ஒரே மாதத்தில்
நாடு கடக்கத் துடிக்கும்
ராஜபக்ச எங்கே...
ஓ
சர்வதேச சமூகமே!
இப்போதேனும்
தமிழன் வீரத்திற்குத்
தலைவணங்கு#SriLanka
மஹிந்த குண்டர்களினால் அமைதியாக அறவழிப்போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து ஆட்சியாளர்கள் மீது கடும் கோபம் கொண்ட மக்கள் அரசியல் பிரமுகர்களின் சொத்துக்குக்கு தீயிட்டு வருகின்றனர்.
இதனையடுத்து முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச குடுபத்துடன் திருகோண்மலை கடற்படை முகாமில் தஞ்சமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.