தமிழீழ விடுதலைப்புலிகள் தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்டம் ; தாய் ஒருவரின் உருக்கமான கருத்து
நேற்று(26) தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 72 ஆவது பிறந்தநாள் நிகழ்வு யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் நடைபெற்றது.
வல்வெட்டித்துறை ஆலடி பகுதியில் அவரது பூர்வீக வீடு இருந்த காணிக்குள் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக சிவப்பு மஞ்சள் கொடிகள் கட்டி அலங்கரிக்கப்பட்டு , கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

நெகிழ்ச்சி கருத்து
அதேவேளை , பிறந்தநாளை முன்னிட்டு மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் , மரக்கன்றுகளை வழங்கி வைக்கப்பட்டது.
இதன் போது அங்கிருந்த பலரும் தமது கருத்துக்களை தெரிவித்திருந்த நிலையில் தாயொருவரின் கருத்து பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பான பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி..