யாழில் குடியிருப்புக்கு நடுவே கோழிப்பண்ணை; சுகாதார சீர்கேட்டால் பாதிக்கப்படும் மக்கள்

Jaffna Sri Lankan Peoples Disease
By Sulokshi Mar 07, 2026 07:46 AM GMT
Report

   யாழ்ப்பாணம் - வலிகாமம் தெற்கு பிரதேச சபைக்கு உட்பட்ட உடுவில் தெற்கு சத்தியபுரம் பிரதேசத்தின் கறுத்தான் வடலி குறிச்சியில் அமைக்கப்பட்டுள்ள தனியார் கோழிப்பண்ணையால் அதனைச் சூழவுள்ள பொதுமக்கள் பெரும் சுகாதார சீர்கேடுகளை எதிர்நோக்குவதாக தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் அறியவருவதாவது, ஜே - 182 கிராம சேவையாளர் பிரிவில் அமைந்துள்ள குறித்த பகுதியில் குடியிருப்புகளுக்கு நடுவே தனியார் ஒருவர் காணியை வாங்கி 2024 ஆம் ஆண்டில் கோழிப்பண்ணை அமைத்துள்ளார்.

யாழில் குடியிருப்புக்கு நடுவே கோழிப்பண்ணை; சுகாதார சீர்கேட்டால் பாதிக்கப்படும் மக்கள் | Poultry Farm Uduvil People Affected Healthproblems

சுகாதார சீர்கேட்டால் பாதிக்கப்படும் மக்கள்

குறித்த பண்ணை அமைக்கும் போதே கிராம மக்கள் சந்தேகமடைந்து குறித்த காணி உரிமையாளரிடம் கேட்டபோது அவர் மேலே சூரிய மின்கல படலம் அமைத்து பெண்களுக்கு சுயதொழில் முயற்சி வாய்ப்பு வழங்கப்போவதாக கூறியிருந்தார். பின் கூறியதற்கு மாறாக கோழிப்பண்ணை அமைத்துள்ளார்.

டுபாய் விமான நிலையம் அருகில் வெடிப்புச் சத்தம்; அச்சத்தில் உலக நாடுகள்

டுபாய் விமான நிலையம் அருகில் வெடிப்புச் சத்தம்; அச்சத்தில் உலக நாடுகள்

கோழிப்பண்ணை அமைத்த பின்னர் குறித்த பகுதியில் வாழும் மக்கள் துர்நாற்றம், ஆஸ்துமா, சுவாசிப்பதில் சிரமம், இலையான் பெருகுவதால் ஏற்படும் தொற்றுகள் என பெரும் சுகாதார பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளதோடு குறிப்பாக வயதானவர்களும், சிறார்களும் மருத்துவமனைகளுக்கும் சென்று சிகிச்சை பெற்றுள்ளனர்.

இது தொடர்பில் கிராம மக்கள் கிராம சேவையாளர், பிரதேச சபை, பிரதேச செயலகம், பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், சுன்னாகம் பொலிஸ் நிலையம், சுற்றுச் சூழல் அதிகாரசபை போன்ற அலுவலகங்களுக்கு சென்று உரிய அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளனர்.

குடியிருப்புக்கு நெருக்கமாக உள்ள பகுதியில் தாங்கள் அனுமதி வழங்க மாட்டோம் என பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் தெரிவித்துள்ளனர்.

சுற்றுச் சூழல் அதிகார சபையினர் தங்கள் அதிகார வரம்பைக் குறிப்பிட்டு இந்த விடயத்தில் பிரதேச சபையினர் தான் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கடிதம் ஒன்றின் மூலம் குறிப்பிட்டுள்ளனர்.

ஹிஸ்புல்லா ஏவுகணைத் தாக்குதல்; இஸ்ரேல் வடக்கு பகுதியில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர எச்சரிகை

ஹிஸ்புல்லா ஏவுகணைத் தாக்குதல்; இஸ்ரேல் வடக்கு பகுதியில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர எச்சரிகை

ஆனாலும், குறித்த திணைக்களங்களின் அதிகாரிகள் மாறி மாறி ஏனைய அரச அலுவலகங்களை கைகாட்டி விட்டு உரிய சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாகவும், வலிகாமம் தெற்கு பிரதேச சபை தவிசாளர் பிரகாஷிடம் பொதுமக்கள் சென்று முறையிட்டு அவர் நேரடியாக வந்து பார்வையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

நல்ல காற்றை சுவாசித்து ஆரோக்கியமாக வாழ வேண்டிய நாங்கள் தொடர்ந்தும் துர்நாற்றத்தை சுவாசிக்க வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் கவலை தெரிவித்துள்ளனர்.

சகோதரியைக் காப்பாற்ற சென்ற சகோதரன் அடித்துகொலை

சகோதரியைக் காப்பாற்ற சென்ற சகோதரன் அடித்துகொலை

கடந்த காலங்களில் சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் சென்று பொதுமக்கள் பல தடவைகள் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், மீண்டும் புதிதாக பொறுப்பேற்ற பொலிஸ் பொறுப்பதிகாரியிடமும் சென்று முறையிட்டுள்ளனர்.

அவர் அனைத்து தரப்பினரிடமும் ஆராய்ந்து ஓரிரு வாரங்களில் பிரச்சினையை தீர்த்து வைப்பதாக பொதுமக்களிடம் உறுதியளித்துள்ளார். குறித்த விடயத்திற்கு ஒரு நிரந்தரத் தீர்வை எதிர்பார்த்து அப்பகுதி மக்கள் காத்திருக்கின்றனர்.

மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US