சகோதரியைக் காப்பாற்ற சென்ற சகோதரன் அடித்துகொலை
மின்னேரியா - ரொட்டவெவ பகுதியில், தனது சகோதரியைக் காப்பாற்றச் சென்ற முதியவர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று (06) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் ரொட்டவெவ, கல்ஓய சந்தி பகுதியைச் சேர்ந்த 70 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. முதியவரின் சகோதரியை, அவரது மனநலம் பாதிக்கப்பட்ட மகன் தாக்கி வந்ததை அறிந்த அறிந்த முதியவர், தனது சகோதரியைக் காப்பாற்றுவதற்காக அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார்.

மனநலம் பாதிக்கப்பட்ட மகன்
இதன்போது, கோபமடைந்த சகோதரியின் மகன், தடியால் சரமாரியாகத் தாக்கியதில் முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சந்தேகநபரின் தாய் படுகாயமடைந்த நிலையில் ஹிங்குராக்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் நீதவான் விசாரணைக்காக பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மின்னேரியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.