மாகாண சபை தேர்தலை தள்ளிப்போட அரசு முயற்சி ; டி.வி. சானக குற்றச்சாட்டு
ஆட்சியைப் பிடித்தவுடன் மாகாண சபை தேர்தல்களை உடனடியாக நடத்துவதாக ஆரம்பத்தில் உறுதியளித்தவர்கள், தற்போது தேர்தல் பிரச்சாரங்களில் இருந்து காணாமல் போயுள்ளனர் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக குற்றம் சுமத்தியுள்ளார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், நாட்டின் முக்கிய தீர்மானங்கள் அனைத்தும் அரசாங்கத்தின் அமைச்சர்களால் அல்லது "பெலவத்தை கட்சி காரியாலயத்தின்" செயலாளராலேயே எடுக்கப்படுகின்றன என்பதை நாட்டின் மக்கள் தற்போது தெளிவாகப் புரிந்துகொண்டுள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபை தேர்தல்களை மேலும் ஒத்திவைப்பதற்கான வழிகளையே தேடி வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அத்துடன், தற்போதைய அரசாங்கத்திற்கு எந்தவொரு தேர்தலையும் நடாத்துவதற்கான தகுதியோ அல்லது ஆளுமையோ இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.