கொரோனா வைரஸ் சளி, காய்ச்சலை போல நோயாக மாறும் சாத்தியம் உள்ளதா?
உலக மக்கள் பல மாதங்களாக தொற்று அறிகுறிகள் நீண்ட கால அபாயங்கள் பல்வேறு கொரோனா என தொடர்ச்சியாக பெருந்தொற்றை எதிர்த்து போராடி வருகிறார்கள்.
கடந்த ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக நம்மை அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றின் முடிவு எப்போது என்பதற்கான பதிலை தேடி ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு வகையான ஆய்வுகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
கொரோனா தடுப்பிற்காக தீவிர முன்னெச்சரிக்கைகள் பெரும்பாலான மக்கள் தடுப்பூசி போட்டு கொள்வது மற்றும் மாஸ்க் அணிவது உள்ளிட்டவற்றை பின்பற்றிய பிறகும் கூட தொற்றை முழுமையாக கொண்டு வர முடியவில்லை.
இதனிடையே SARS-COV-2 - வைரஸை முற்றிலுமாக ஒழிப்பதற்கான சாத்தியம் இல்லை எனும் பட்சத்தில் மக்கள் தொகையில் பெரும்பாலானோர் தடுப்பூசி போட்டு கொள்வதன் மூலம் இந்த பெருந்தொற் தொற்றை ஏற்படுத்தி உள்ள வைரஸ் சளி அல்லது காய்ச்சலை ஏற்படுத்தும் மற்றொரு பொது நோய் போல மாற்றப்படலாம் என பல நிபுணர்கள் கூறி உள்ளனர்.
கொரோனா முதலில் பரவ துவங்கிய போது மக்களுக்கு அது ஏற்படுத்த போகும் பேரழிவை பற்றி தெரியவில்லை. ஒரு சில வாரங்கள் அல்லது மாதங்களில் நிலைமை சரியாகி விடும் என்றே பலர் நம்பினர்.
ஆனால் ஒன்றரை வருடங்களை கடந்தும் இன்னும் தொற்று நீடிப்பதோடு மட்டுமல்லாமல் அடுத்த அலையை அச்சத்தோடு எதிர்நோக்கி உள்ளோம். அடுத்தடுத்து கண்டறியப்படும் கோவிட் இனி இந்த தொற்று இல்லா உலகை நம்மால் பார்க்க முடியாதா என்ற ஏக்கத்தை மக்களிடையே ஏற்படுத்தி இருக்கிறது.
மக்களை போலவே தான் விஞ்ஞானிகளும் இந்த கோவிட் தொற்றை முற்றிலும் ஒழிப்பது சாத்தியமற்றது என்றே நினைக்கிறார்கள். ஒரு புள்ளிவிர ஆய்வின் படி 100-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்களில் சுமார் 90 பேர் கோவிட் முற்றிலும் ஒழிக்க முடியாத என்டமிக்காக மாறும் மற்றும் எதிர்காலத்தில் நம்முடனே வாழ போகிறது என்று நம்புகிறார்கள்.
தடுப்பூசி மூலமோ அல்லது இயற்கையாகவோ மக்கள் பெறும் நோய் எதிர்ப்பு சக்தியை பொறுத்து இதன் தாக்கம் மாறுபடும் என்றும் தெரிவிக்கின்றனர். உலக நாடுகளை மேலும் அச்சுறுத்தி வரும் அல்லது டீ.1.617.2 மிகவும் வேகமாக பரவ கூடிய தொற்றாகும்.
தற்போது காணப்படும் வேறு எந்த மாறுபாட்டையும் விடவிடவும் 2 மடங்கு அதிக பாதிப்புகளை ஏற்படுத்த கூடிய டெல்டா தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்களுக்கு கடும் பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.
அல்லது காய்ச்சல் போன்ற வழக்கமான நோயாக கொரோனாவும் மாறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். மக்களிடையே இந்த தொற்று வாழ்ந்து கொண்டு பாதிப்புகளை ஏற்படுத்தினாலும் கூட கடுமையான நோய் தாக்கம் மற்றும் தீவிர சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் சேர்க்கப்படும் வாய்ப்புகள் குறைய கூடும் என்றும் தெரிவிக்கின்றனர்.
கோவிட்-19 ஒரு வழக்கமான நோயாக மாறுமா இல்லையா என்பது மக்கள் எவ்வளவு விரைவில் தடுப்பூசி போடுகிறார்கள் என்பதை பொறுத்தது என்றும் நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள்.