கண்டால் கூறுங்கள் ; ஏ.டி.எம். திருடியை தேடும் பொலிஸார்
மொரட்டுவ, ராவனாத்தை பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரின் ஏ.டி.எம். (ATM) கார்டைப் பயன்படுத்தி, கொஹுவல மக்கள் வங்கியின் ஏ.டி.எம். இயந்திரத்தினூடாக பணத்தை மோசடியாகப் பெற்றுக் கொண்ட சந்தேகநபரான பெண் ஒருவரைக் கண்டுபிடிப்பதற்குப் பொதுமக்களின் உதவி கோரப்பட்டுள்ளது.
கடந்த 2025 செப்டம்பர் 26ஆம் திகதியன்று கொஹுவல பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய, பொலிஸாரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன்போது, ஏ.டி.எம். இயந்திரத்தின் சீ.சீ.டி.வி. (CCTV) கமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் குறித்த பெண் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவரை உடனடியாகக் கைது செய்வதற்குப் பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியமெனப் பொலிஸ் ஊடகப் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.
இப் பெண் குறித்த ஏதேனும் தகவல்கள் தெரிந்தால் உடனடியாகத் தொடர்பு கொள்ளுமாறு கீழ்க்கண்ட தொலைபேசி இலக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன: கொஹுவல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி: 071-8591669 கொஹுவல பொலிஸ் நிலையம்: 011-2853929