சுரேஷ் சலேவுக்காக போடப்பட்ட கூடாரங்களை அகற்றிய பொலிஸார்
கைதுசெய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலேவுக்குஆதரவு தெரிவித்து இன்று (08) காலை கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன்பாக முன்னெடுத்த போராட்டத்திற்காக அமைக்கப்பட்டிருந்த கூடாரம் பொலிஸாரால் அகற்றப்பட்டுள்ளது.
போராட்டத்திற்காக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கூடாரத்தை அகற்றிய பொலிஸார், அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பலப்படுத்தியுள்ளனர்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சுரேஷ் சலே
அதேவேளை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த சுரேஷ் சலே, உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
நேற்று (07) இரவு அவசர சிகிச்சைக்காக அவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதாகவும், இதற்கு முன்னர் அவர் குற்றப்புலனாய்வு திணைக்கள தடுப்புக் காவலில் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணையின் கீழ் கைதுசெய்யப்பட்ட அவர், தடுப்புக் காவலில் இருந்தபோது உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததாகவும், அதனைத் தொடர்ந்து உடல்நிலை மோசமடைந்ததாகவும் கூறப்படுகின்றது.