இலஞ்ச குற்றச்சாட்டில் பணி இடைநிறுத்தப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்!
காலி மாவட்டம் அக்மீமன பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவர் இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டில் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
மதுபோதையில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திய குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டு, அவரது மோட்டார் சைக்கிள் மற்றும் ஆவணங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.
குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் அவ் ஆவணங்களை அதன் உரிமையாளரிடம் ஒப்படைப்பதற்காக 5,000 ரூபாவை இலஞ்சமாகக் கேட்டுள்ளார்.
தகவலறிந்து காலி உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மேற்கொண்ட விசாரணையின் பின்னர், இந்த பொலிஸ் உத்தியோகத்தர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டார்.
குறித்த மோட்டார் சைக்கிள் சாரதி மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படாமல் தவறிழைத்த பொலிஸ் உத்தியோகத்தர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.