யாழ் பல்கலைக்கழகத்தில் ஆயுதங்கள்; பொலிஸாரின் கண்டு பிடிப்பு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் யுத்தக் காலத்தில் இருந்தே அங்கு இருந்திருக்கலாம் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
பல்கலைக்கழகத்தின் நூலகத்தின் கூரைக்கு அடியில் இந்த ஆயுதங்களும் வெடிமருந்துகளும் மீட்கப்பட்டமை குறித்து காவல்துறை ஊடகப் பேச்சாளர் இதனை கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக நூலகத்தின் கூரைக்கு அடியில் ஆயுதங்கள்
குறித்த ஆயுதங்கள் நீண்டகாலமாக, குறிப்பாக, யுத்தக் காலத்தில் இருந்தே அங்கு இருந்திருக்கலாம் என தாம் நம்புவதாக அவர் தெரிவித்தார்.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் நூலகத்தின் கூரைக்கு அடியில் ஆயுதங்களும் வெடிமருந்துகளும் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. இதை அவதானித்த , பல்கலைக்கழக நிர்வாகம் கோப்பாய் காவல்துறையினருக்குத் தகவல் வழங்கியுள்ளது.
இதனையடுத்து, 31 ஆம் திகதி காலை காவல்துறையினரும் விசேட அதிரடிப் படையினரும் குறித்த பொருட்களை மீட்டனர்.
அத்துடன், மேலதிக பழுதுபார்க்கும் பணிகளின் போது, நூலகத்தின் கூரையின் அருகிலுள்ள ஒரு பகுதியில், மேலும் ஒரு டி56 ரக துப்பாக்கி, இரண்டு மெகசின்கள், வெடிமருந்துகள் மற்றும் பல மருத்துவ உபகரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த நிலையில், அங்கு மேலும் ஆயுதங்கள் மறைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதால், காவல்துறையும், விசேட அதிரடிப் படையினரும் இணைந்து விரிவான விசாரணையை ஆரம்பித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.