போதை பாவனையால் வேலையிழந்த பொலிஸ் கான்ஸ்டபிள்!
ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ள பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
பண்டாரகமை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துளளது. இதனையடுத்து கடந்த மாதம் 30ம் திகதி பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
பரிசோதனையில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக பொலிஸ் கான்ஸ்டபிள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.