மத்திய கிழக்கு போர் பதற்றம்; இலங்கையில் எரிபொருள் விலை உஅயர்வு
மத்திய கிழக்கு போர் பதற்றம் உலக நாடுகளில் எரிபொருள் தட்டுபாடு ஏற்படுவதற்கு வழிவகுத்தது. இதனையடுத்து பல்வேறு நாடுகளிலும் எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், இலங்கையிலும் எரிபொருள் விலைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
சினோபெக் (SINOPEC) மற்றும் எல்.ஐ.ஓ.சி(LIOC) என்பனவும் எரிபொருள் விலையில் திருத்தங்களை மேற்கொண்டுள்ளன.

எரிபொருட்களின் விலைகளில் திருத்தம்
இதேவேளை நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
அதன்படி, ஒட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலை 22 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு, 303 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன், லங்கா சுப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை 24 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு, 353 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
ஒக்டேன் 92 ரக பெற்றோல், ஒரு லீற்றரின் விலை 24 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு, 317 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன், ஒக்டேன் 95 ரக பெற்றோல் ஒரு லீற்றர் 25 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு, 365 ரூபாயாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மண்ணெண்ணெய் ஒரு லீற்றர் 13 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு, 195 ரூபாயாக விற்பனை செய்யப்படுவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.