பெண் பொலிஸ் கான்ஸ்டபிளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் பரிசோதகர்
பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அநுராதபுரம், உடமலுவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாகியுள்ளார்.

பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவில் முறைப்பாடு
துஷ்பிரயோகத்திற்குள்ளான பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் கடந்த ஆகஸ்ட் மாதம் 16 ஆம் திகதி ஸ்ரீ மஹா போதி விகாரையில் கடமையில் ஈடுபட்டிருந்துள்ள நிலையில் அதன் மேற்பார்வையாளராக சந்தேக நபரான உப பொலிஸ் பரிசோதகர் செயற்பட்டுள்ளார்.
இதன்பாது உப பொலிஸ் பரிசோதகர் , பெண் பொலிஸ் கான்ஸ்டபிளை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். துஷ்பிரயோகத்திற்குள்ளான பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் இது தொடர்பில் அநுராதபுரம் பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவில் முறைப்பாடு அளித்துள்ளார்.
இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபரான உப பொலிஸ் பரிசோதகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சாமி சிலையின் கையில் ரத்தத்துடன் கிடந்த மனிதத் தலை ; பிறந்த நாளன்று நடத்தப்பட்ட கொடூரத்தின் பின்னணி வௌியானது
தமிழர் பகுதியொன்றில் சிறுமிக்கு பல தடவைகள் நடத்தப்பட்ட கொடூரம் ; துயரை ஏற்படுத்தும் குடும்பப் பின்னணி