தம்மிக்கவின் பின்வாங்கலால் நிலைகுலைந்து போன மொட்டுக்கட்சி! காரணம் ரணிலா?
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தனிப்பட்ட காரணங்களால் போட்டியிட முன்வரவில்லையென்றும் அதற்கு அழைப்பு விடுத்தமைக்கு நன்றியென்று தெரிவித்தும் தம்மிக்க பெரேரா எம்.பி பொதுஜன பெரமுனவின் செயலருக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.
இதனையடுத்து நாளை ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்சவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அறிவிக்கப் போகிறது.
நேற்றிரவு வரை தம்மிக்க மொட்டுக்கட்சியோடு தான் இருந்தார். ஆனால் இன்று அதிகாலைக்குள் மனம் மாறி அவர் கடிதமொன்றை அனுப்பி போட்டியிலிருந்து பின்வாங்கினார்.
தம்மிக்கவின் பின்வாங்கலால் மொட்டுக்கட்சி நிலைகுலைந்து போனது. தேர்தல் செலவுகளையெல்லாம் தம்மிக்கவை வைத்து செய்யவிருந்த மொட்டுக்கட்சிக்கு இறுதி நேரத்தில் ஆப்பைச் சொருகியது யார்? ரணிலா?
ரணிலுக்கும் மொட்டுக்கட்சிக்குமிடையில் நல்ல உறவு இருந்தாலும் ரணிலுக்கும் நாமலுக்குமிடையில் இருந்த உறவு சீர்கெட்டுப் போய்விட்டது.
கடந்தவாரம் நாமலின் தொலைபேசி அழைப்பொன்றையே பதிலளிக்காமல் ரணில் விக்கிரமசிங்க புறக்கணித்தார்.
இன்று காலை தம்மிக்க பெரேரா ராஜபக்சக்களின் தொலைபேசி அழைப்புகளை ஏற்கவில்லை. கூட்டிக்கழித்து பார்த்தால் விபரம் புரியும். நீ படித்த ஸ்கூலில் ஹெட்மாஸ்டர் நானடா என்று நாமலுக்கு ரணில் சொல்லாமல் சொல்லியுள்ளார்.
மறுபக்கம், நாமல் அரசியலில் அவசரப்பட்டுவிட்டார் என்றே தோன்றுகிறது.
காரணம் சிங்கள வாக்குகளை உடைத்து ரணிலை வீழ்த்த நினைத்தாலும் அது இலேசான விடயமல்ல.. மொட்டுக்கட்சியின் மாவட்ட அமைப்பாளர்கள் இப்போது ரணில் பக்கம்.
குறித்த தகவலை முகநூலில் சிரேஷ்ட ஊடகவியலாளர் சிவா ராமசாமி பதிவிட்டுள்ளார்.