உங்கள் பாக்கெட்டில் இந்த 5 பொருட்கள் இருந்தால் பல சிக்கல்கள் வருமாம்
நம்முடைய பாக்கெட்டில் வைத்திருக்கும் எந்தெந்த பொருட்கள் நமக்கு பிரச்சனைகளை, சிக்கல்களை ஏற்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியுமா? எந்தெந்த பொருட்கள் நேர்மறை ஆற்றல்களை, பணவரவை தரும் என நாம் இங்கு பார்ப்போம்.
பாக்கெட்டில் வைக்கக் கூடாத 5 பொருட்கள்
கிழிந்த பர்ஸ்
கிழிந்த பர்ஸ்களை பாக்கெட்டில் வைத்திருப்பதால் எதிர்மறை ஆற்றல்கள் அதிகம் ஈர்த்து, பண இழப்பை ஏற்படுத்தி விடும். சில நேரங்களில் பொருளாதாரத்தில் நெருக்கடியான நிலையை ஏற்படுத்தி உள்ளது. இது போன்ற எதிர்மறை ஆற்றல்கள் ஏற்படாமல் இருக்க உடனடியாக கிழிந்த பர்ஸ்கள் இருந்தால் தூக்கி போட்டு விடுங்கள். புதிய பர்ஸ்களை வைத்திருப்பதால் பணவரவு ஈர்க்கப்படும். நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள், செல்வ வளம் நிறைந்த வாழ்க்கையை வாழ முடியும்.
மருந்துகள்
பாக்கெட்டில் எப்போதும் மருந்துகளை வைத்துக் கொண்டே இருந்தால் அது உடல்நிலையை மோசமடைய செய்து, பல பாதிப்புக்களை ஏற்படுத்தும். மாத்திரைகள் ஏதாவது உடன் வைத்திருப்பதாக இருந்தால் அதற்கென தனியான பை அல்லது டப்பாவில் வைத்து உடன் வைத்துக் கொள்ளலாம். பணம் வைக்கும் உங்களின் பர்சில் கண்டிப்பாக மருந்துகளை வைக்காதீர்கள். இதனால் தினசரி வாழ்க்கையில் ஆரோக்கியம் கெடுவதுடன், மருத்துவ செலவுகளும் அதிகரிக்கும். இந்த எளிய பழக்கம் உங்களை ஆரோக்கியமாக வைப்பதுடன், பாசிடிவ் ஆற்றல்களை ஈர்க்கும். அதனால் எப்போதும் நேர்மறை ஆற்றல்களை ஈர்க்கும் பொருட்களை மட்டும் பாக்கெட்டில் வைக்க பழகிக் கொள்ளுங்கள்.
பழைய பில்கள்
சிலர் பாக்கெட் அல்லது பர்சில் பழைய பில்கள், டிக்கெட்கள் என வேண்டாத குப்பைகளை நிறைத்து வைத்திருப்பார்கள். இதனால் எதிர்மறை ஆற்றல்கள் தான் அதிகரிக்கும். வேண்டாதவற்றை தூக்கி எறிந்து விடலாம். அதே போல் பழைய கிழிந்த ரூபாய் நோட்டுக்களையும் வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும். முக்கியமான பில்களாக இருந்தால் தனியாக ஏதாவது பைல் போட்டு சேகரித்து வைக்கலாம். இப்படி செய்வதால் உங்களின் பொருளாதா நிலையில் நல்ல வளர்ச்சி பெற முடியும். பழையவற்றை தூக்கி எறிவதால், புதிய வாய்ப்புகள் தேடி வர துவங்கும்
தேவையற்ற காகிதங்கள்
தேவையற்ற குறிப்புகள், நம்பர்கள் எழுதி வைத்திருக்கும் காகிதங்களை பர்சில் அடைத்து வைக்காதீர்கள். இதற்கென தனியாக நோட்டு போட்டு எழுதி வைக்கலாம் அல்லது டிஜிட்டல் பைல்களாக போட்டு தனியாக பாதுகாக்கலாம். தேவையற்ற விஷயங்களை அகற்றுவதால் மனதில் தேவையற்ற அழுத்தம் ஏற்படுவது தவிர்க்கப்படும். இதனால் புதிய யோசனைகள், உத்வேகம் ஆகியவை ஏற்படும். தேவையான விஷயங்களை மட்டும் பாக்கெட்களில் வைத்திருப்பது நல்லது.
சாமி கயிறுகள்
நம்பிக்கை காரணமாக கோவிலில் வாங்கி கயிறுகளை சிலர் பர்ஸ்களில் வைத்திருப்பார்கள். ஆனால் இருந்து தெய்வீக சக்திக்கு பதிலாக எதிர்மறை ஆற்றல்களையே ஈர்க்கக் கூடியவை என வாஸ்து சாஸ்திரம் சொல்கிறது. அவைகள் புனிதமான கயிறுகள் என்பதால் அதற்குரிய மரியாதையை கொடுத்து, உரிய இடத்தில் சேமித்து வைக்க வேண்டும். அப்படி செய்வதால் மட்டும் தெய்வீக ஆற்றல்களையும், நேர்மறையான விஷயங்களையும் நம்முடனேயே இருக்க வகை செய்யும். ஆனால் அவற்றை அவமரியாதை செய்வது போல் பர்சில் மற்ற குப்பைகளுடன் வைத்திருப்பதால் அது எதிர்மறை விஷயங்களை ஈர்த்து விடும்.