சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளிநாடு செல்லும் பிரதமர் ஹரிணி!
உலக பொருளாதாரமன்ற மாநாடு எதிர்வரும் 19 ஆம் திகதி சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் ஆரம்பமாகின்ற நிலையில் அதில் கலந்துகொள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய சுவிட்சர்லாந்துக்கு செல்லவுள்ளார்.
23 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள குறித்த மாநாட்டில் இலங்கை சார்பில பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பங்கேற்கின்றார்.

பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்பு
பிரதி நிதியமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் அவருடன் செல்கின்றனர்.
இந்த விஜயத்தின்போது பிரதமர் ஹரிணி அமரசூரிய, பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்தவுள்ளார்.
முதலீட்டு வாய்ப்புகள் குறித்தும், சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிப்பதற்கான வழிகள் குறித்தும் பிரதமர் ஹரிணி கலந்துரையாடல்களை நடத்துவார் என தெரியவருகின்றது.
அதேவேளை 6 ஆம் வகுப்பு பாடப்புத்தகம் தொடர்பில் பிரதமர் ஹரிணி மீது தென்னிலங்கை அரசியல்வாதிகள் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.