சத்தியாகிரகத்தை கைவிட்டார் விமல் வீரவன்ச
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச கல்வி அமைச்சுக்கு முன்னால் முன்னெடுத்திருந்த தனது சத்தியாகிரகப் போராட்டத்தை முடித்துக்கொண்டுள்ளார்.
தரம் 6 மாணவர்களுக்கான புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத் தொடர்ந்து, விமல் வீரவன்ச போராட்டைத்தி நிறுத்துவதாக கூறியுள்ளார்.

நள்ளிரவில் மாயமான விமல் வீரவன்ச
புதிய கல்விச் சீர்திருத்தங்களை அவசரமாக நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, கல்வி அமைச்சுக்கு முன்பாக விமல் வீரவன்ச நேற்று (12) இந்த சத்தியாகிரகத்தை ஆரம்பித்திருந்தார்.
இந்நிலையில், குறித்த சீர்திருத்தங்களை ஒத்திவைக்க அரசாங்கம் எடுத்த தீர்மானத்தையடுத்து, தனது போராட்டத்தைக் கைவிடுவதாக விமல் வீரவன்ச அறிவித்துள்ளார்.
அதேவேளை ஐ.நாவுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி அரசியல் நகைச்சுவையாளராக மாறிய விமலின் இந்த போராட்டமும் அரசியல் நாடகமென சமூகவலைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டது.
அதேசமயம் நேற்றிரவு 11 மணியளவில் போராட்டக்களத்தில் இருந்து விமல் வீரவன்ச வெளியேறி பின்னர் இன்று காலை மீண்டும் வந்து போராட்டத்தில் அமர்ந்ததாகவும் கூறப்படுகின்றது.