கிளிநொச்சி தொழிற்சாலையில் 50 மில்லியன் மோசடி; தென்னிலங்கையர்கள் கைது
கிளிநொச்சியிலுள்ள தனியார் தொழிற்சாலையொன்றில் சுமார் 50 மில்லியன் ரூபாய் மோசடி செய்த தென்னிலங்கையர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெறுமதியான ஆடைகளை ஒன்றரை வருடமாக மோசடியாக திருடி வந்த சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் நேற்று (12) கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் 27 மற்றும் 36 வயதுடையவர்கள்
இந்த திருட்டு சம்பவம் 18.03.2024 முதல் 29.05.2025 வரையான காலப்பகுதிக்குள் இடம்பெற்றுள்ளது.
சந்தேக நபர்கள் 27 மற்றும் 36 வயதுடையவர்கள் எனவும், அவர்கள் மாவனெல்ல மற்றும் கெடஹெத்த பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள் இன்று (13) கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுத்திணைக்களம் மேற்கொண்டு வருகிறது.