இலங்கைக்கு தயவு செய்து செல்லுங்கள்...கோரிக்கை வைத்த ஜேர்மன் தம்பதி
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் காரணமாக சுற்றுலாப் பயணிகள் இலங்கை செல்வதை தவிர்த்து வருகின்றனர்.
இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஜேர்மன் தம்பதியொன்று தற்போதைய நிலைமை குறித்து காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த வீடியோவில்,
“இரண்டு வாரங்களாக நாங்கள் இலங்கையில் இருக்கிறோம். முதலில் கண்டியில் இருந்து பயணத்தைத் தொடங்கினோம். எல்ல பகுதிக்கு ரயிலில் சென்றோம்.
அதேபோன்று திருகோணமலைக்கும் சென்றோம். சீகிரியா மற்றும் ஹபரணையின் கடைசி பகுதிக்கு செல்வோம். இலங்கை மக்கள் மிகவும் இரக்க குணம் கொண்டவர்கள். நாங்கள் சந்தித்த அனைவரும் மிகவும் அன்பானவர்கள். இலங்கைக்கு செல்ல பயப்பட வேண்டாம். இங்கு கலவரம் இல்லை. இங்கே மிகவும் பாதுகாப்பானது.
ஜேர்மனியில் வாழும் மக்கள் யாருக்கும் பயப்பட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.
தயவு செய்து இலங்கைக்கு வருகை தருமாறு மக்களை கேட்டுக்கொள்கிறோம், ”என்று தம்பதியினர் ஒரு வீடியோவில் தெரிவித்தனர்.