திருமண விளம்பரங்களுக்குத் தடை விதிக்கத் திட்டமா? ; அமைச்சரின் அலுவலகம் மறுப்பு

Sri Lanka Government Of Sri Lanka Saroja Savithri Paulraj
By Sahana Nov 26, 2026 04:45 AM GMT
Report

சாதி அடிப்படையிலான தகவல்களைக் குறிப்பிட்டு வெளியிடப்படும் திருமண விளம்பரங்களுக்குத் தடை விதிக்கும் வகையில் சட்டம் இயற்றுவதற்கு மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல் ராஜ் திட்டமிட்டுள்ளதாக வெளியான ஊடகச் செய்திகளை அமைச்சரின் அலுவலகம் மறுத்துள்ளது.

விளையாட்டு மைதானத்தில் மர்ம மரணம் ; துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சடலம் மீட்பு

விளையாட்டு மைதானத்தில் மர்ம மரணம் ; துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சடலம் மீட்பு

கடந்த 25ஆம் திகதி வெளியிடப்பட்ட விளக்க அறிக்கையிலேயே இந்த மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரின் கருத்துக்கள் சூழலிலிருந்து விலக்கிப் புரிந்துகொள்ளப்பட்டு, தவறான தலைப்புகளுடன் சில ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

திருமண விளம்பரங்களுக்குத் தடை விதிக்கத் திட்டமா? ; அமைச்சரின் அலுவலகம் மறுப்பு | Plan To Ban Caste Based Matrimonial Advertisements

கடந்த நவம்பர் 23ஆம் திகதி அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், பாலின அடிப்படையிலான வன்முறையை ஒழிப்பதற்கான 16 நாட்கள் தேசிய வேலைத்திட்டம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் இவ்விடயம் குறித்துப் பேசியிருந்தார்.

இதன்போது, சாதி உள்ளிட்ட சமூக அடையாளங்களைக் குறிப்பிட்டு வெளியிடப்படும் திருமண விளம்பரங்களால் சில சமூகப் பிரிவினர் பாகுபாடுகளுக்கும் பாதிப்புகளுக்கும் உள்ளாகின்றனர் எனவும், இவ்விடயத்தில் அரசாங்கம் தலையிட வேண்டுமா எனவும் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர், தனிப்பட்ட தீர்மானங்களை மேற்கொள்ளும்போது சில விடயங்களைப் புறக்கணிக்க முடியும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன், சமூக ஊடகங்களில் மூடநம்பிக்கைகள், சூனியச் செயற்பாடுகள் மற்றும் மாந்திரீக நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் தவறான விளம்பரங்கள் அதிகரித்து வருவது குறித்தும் அமைச்சர் கவலை வெளியிட்டிருந்தார்.

இவ்வாறான விளம்பரங்கள் சமூகத்திற்கும் இளம் தலைமுறையினருக்கும் பாதிப்புகளை ஏற்படுத்துவதாகக் குறிப்பிட்ட அவர், ஊடகங்களுக்கான ஒழுக்க நெறிமுறைகளை உருவாக்குவதற்கான சட்ட ஏற்பாடுகள் தொடர்பில் ஆராயும்போது இத்தகைய பிரச்சினைகளும் கவனத்தில் கொள்ளப்பட்டதாகத் தெரிவித்திருந்தார்.

எனினும், சாதி அடிப்படையிலான திருமண விளம்பரங்களைக் கட்டுப்படுத்தவோ அல்லது தடை செய்யவோ, அதேபோன்று எந்தவொரு கலாசார அடையாளத்தையும் விமர்சிக்கவோ அல்லது கேள்விக்குட்படுத்தவோ அமைச்சரின் கருத்துக்களில் எவ்வித நோக்கமும் வெளிப்படுத்தப்படவில்லை என அமைச்சரின் அலுவலகம் தனது விளக்க அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.

யாழ் மாநகர சபை அதிரடி நடவடிக்கை ; வீதியை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட கட்டுமானம் அகற்றம்

யாழ் மாநகர சபை அதிரடி நடவடிக்கை ; வீதியை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட கட்டுமானம் அகற்றம்

10ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, வவுனியா

26 Nov, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மாதகல், அராலி தெற்கு, Vancouver, Canada

23 Nov, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

19 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, New Malden, United Kingdom

23 Nov, 2021
மரண அறிவித்தல்

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், மல்லாவி, London, United Kingdom, வவுனியா

23 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

26 Nov, 2025
மரண அறிவித்தல்

சரவணை, திருநெல்வேலி, London, United Kingdom

20 Nov, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உடுப்பிட்டி, Toronto, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Fribourg, Switzerland

18 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை, Toronto, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

26 Oct, 2026
மரண அறிவித்தல்

சுருவில், கரம்பொன், Brampton, Canada

22 Nov, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான் வடக்கு, Oslo, Norway

22 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்

வேலணை மேற்கு, புளியங்கூடல் தெற்கு

28 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, கொக்குவில், Pickering, Canada

20 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US