ஒரே நாளில் அடுத்தடுத்து பலியான கணவன், மனைவி ; துயரில் உறவுகள்
காலம் முழுக்க ஒருவருக்கொருவர் நிழலாகவும் துணையாகவும் வாழ்ந்த கணவன் – மனைவி இருவரும், ஒரே நாளில் வெவ்வேறு நேரங்களில் உயிர்நீத்த நெஞ்சை உருக்கும் சம்பவம், உறவினர்கள் மற்றும் கண்டி, பன்விலை மடுல்கலை – சோலங்கந்தைப் பகுதி மக்களை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
கண்டி சோலங்கந்தையைச் சேர்ந்த 81 வயதுடைய கணவன் மற்றும் அவரது 80 வயது மனைவி ஆகிய இருவருமே திங்கட்கிழமை வெவ்வேறு நேரங்களில் உயிரிழந்துள்ளனர்.

சோக சம்பவம்
இவ்விருவரும் தமது திருமணமான மகளின் வீட்டில் தங்கியிருந்த நிலையில், தந்தைக்குத் திடீரெனச் சுகயீனம் காரணமாக சிகிச்சைக்காகக் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
வீட்டில் தாய் உயிரிழந்த நிலையில்அதிர்ச்சித் தகவலைக் கண்ணீருடன் தொலைபேசி வாயிலாகத் தனது கணவனுக்குத் தெரிவித்தார்.
மறுமுனையில் இருந்த கணவனோ, வைத்தியசாலையில் தந்தையும் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அடுத்தடுத்து நடந்த சோக சம்பவம் அவர்களது குடும்பத்தினரை சோகத்தில் ஆழத்தியுள்ளது.