லொட்டரில் 2,500 கோடி வென்ற நபர்... பரிசை தர மறுத்த நிறுவனம்!
அமெரிக்காவில் ஒருவருக்கு லொட்டரியில் 2,500 கோடி ரூபாய் பரிசை வென்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த எண்களைக் கொண்ட லொட்டரியை வைத்திருந்த நபருக்கு பரிசைக் கொடுக்க அந்த லாட்டரி நிறுவனம் மறுத்துள்ளது.
இதனால், அதிர்ச்சியடைந்த நபர் அந்த லொட்டரி நிறுவனத்தின் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார்.
கடந்த ஆண்டு (2023) ஜனவரி மாதம், ஜான் சீக்ஸ் என்பவர் பவர்பால் லொட்டரியை வாங்கி வைத்திருந்தார்.
அந்த லொட்டரி தொகுப்பின் வெற்றி பெற்ற எண்கள் அந்த நிறுவனத்தின் இணையத்தில் வெளியிடப்பட்டது.
அந்தத் தருணம் தொடர்பில் விவரித்த ஜான் சீக்ஸ்,
“பவர்பாலின் வெற்றி எண்களுடன் நான் வைத்திருந்த டிக்கெட் எண்கள் பொருந்தியதை முதன் முதலில் பார்த்த போது நான் உணர்ச்சியற்றுப் போனேன்,” என்றார்.
ஆனால், அவர் அந்த லொட்டரியை அமெரிக்காவில் லொட்டரி மற்றும் கேமிங் அலுவலகத்தில் கொடுத்தபோது, அவருக்கு பரிசுத் தொகை வழங்கப்படவில்லை.
“பணத்தைப் பெற்றுத் தரும் முகவர்களில் ஒருவர், என்னுடைய லொட்டரியால் எந்த நன்மையும் இல்லை என்றும், அதனை குப்பையில் வீசுமாறும் என்னிடம் சொன்னதாக ஜான் சீக்ஸ் கூறியுள்ளார்.
ஆனால், ஜான் சீக்ஸ் அந்த லொட்டரியை பத்திரமாக வைத்துக்கொண்டு, ஒரு வழக்கறிஞரை நாடியுள்ளார்.
ஆம், அவர் தற்போது தனக்கு ஏற்பட்ட பாதிப்புற்காக வழக்கு தொடர்ந்திருக்கிறார்.
அந்த வழக்கில் தான் வெற்றி பெற்ற 2,500 கோடி ரூபாயுடன், அதனை தர தாமதிக்கும் ஒவ்வொரு நாளுக்கும் வட்டியுடன் தரக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.