யாழில் ஈவிரக்கமின்றி 30 உயிர்களை கொன்ற நபர்!
யாழ்ப்பாணம் - மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆனைக்கோட்டை பகுதயில் தனது வயல் காணிக்குள் புகுந்த கோழிகளுக்கு விசம் வைத்த நிலையில், 35 கோழிகள் உயிரிழந்துள்ளதாக கோழி உரிமையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
ஆனைக்கோட்டை வயல் நிலமொன்றிற்குள் அப்பகுதியைச் சேர்ந்த மூன்று கோழி உரிமையாளர்களின் 35 கோழிகள் உட்புகுந்தது.
இறந்த நிலையில் கோழிகள்
இந்த நிலையில் தமது கோழிகளுக்கு சோற்றில் விசம் வைத்து அவை இறந்துள்ளதாக குறித்த கோழிகளின் உரிமையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
வயல் நிலப்பகுதியில் ஆங்காங்கே கோழிகள் இறந்த நிலையில் காணப்பட்டமை துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
வயல் நில உரிமையாளரின் எல்லை வேலிகள் பிரதேச வாசிகளால் தீயிடப்பட்டதாக கூறப்படும் நிலையில் குறித்த நபர் மானிப்பாய் பிரதேச சபையில் ஊழியராக பணிபுரிகின்றார் என அறியமுடிகிறது.