சட்டவிரோதமாக தங்கத்தை இறக்குமதி செய்த 05 நிறுவனங்களுக்கு அபராதம்
சட்டவிரோதமான முறையில் தங்கத்தை இலங்கைக்கு இறக்குமதி செய்த பல நிறுவனங்களுக்கு 1243 மில்லியன் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
ஒரு நிறுவனத்திற்கு 179 மில்லியன் ரூபா அபராதம்
சட்டவிரோதமான முறையில் தங்கத்தை இறக்குமதி செய்த 5 நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அதில் ஒரு நிறுவனத்திற்கு 179 மில்லியன் ரூபா அபராதம் செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இனிமேல் தங்கத்தினை இறக்குமதி செய்யும் அனைத்து உரிமம் பெற்ற நிறுவனங்களும் இந்த சட்டவிரோத நடைமுறைகளைத் தவிர்க்க வேண்டும் என்று அமைச்சர் வலியுறுத்துகிறார்.
மேலும், தங்கத்தை நேரடியாக இறக்குமதி செய்யாமல், மூன்றாம் தரப்பினரிடம் இருந்து வாங்கும் தங்கத்திற்கு, உற்பத்தி அறிக்கையினை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அபராதம் விதிக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.