புதிய நாடாளுமன்றம் இவரின் சித்தாந்தத்திற்கு ஏற்ப உருவாக்கப்படும்! பிரதமர் ஹரிணி
நாட்டின் புதிய நாடாளுமன்றம் இந்த பொதுத் தேர்தலில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் சித்தாந்தத்திற்கு ஏற்ப உருவாக்கப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
ஹோமாகமவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பிரதிநிதித்துவப்படுத்தும் சித்தாந்தத்துக்கும் அரசியல் மாற்றத்துக்கும் பொருத்தமானவர்கள் ஒன்றிணைந்து நாடாளுமன்றத்தை உருவாக்க வேண்டும்.
நாட்டுக்கு பொருத்தமான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து புதிய அரசாங்கத்தில் அதன் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு மக்கள் குழுவொன்று தேவை.
மேலும், எங்களின் நாடாளுமன்ற வெற்றி எண்ணிக்கையில் மட்டுமல்ல, தரத்திலும் உள்ளது என்றும் பிரதமர் கூறினார்.
திருடர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்புவதன் மூலம் நாட்டில் மாற்றத்தை எதிர்பார்க்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தை நினைவுபடுத்தும் போது இதுவரையில் இருந்த அருவருப்பான கருத்தை மக்களாலேயே மாற்ற முடியும் என பிரதமர் மேலும் தெரிவித்தார்.