பாணந்துறை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ; விசாரணைகளுக்காக 3 குழுக்கள் நியமனம்
பாணந்துறை - ஹிரண - மேற்கு மாலமுல்ல பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற விருந்துபசாரத்தின் போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு ஒருவர் கொல்லப்பட்டமை தொடர்பான விசாரணைகளுக்காக 3 காவல்துறை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுவின் தலைவரான குடு சலிந்து என்ற சலிந்து மல்சித்த குணரத்ன என்பவரின் வழிகாட்டுதலுக்கு அமைய இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
குறித்த விருந்துபசாரம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் அங்கு உந்துருளியில் பிரவேசித்த அடையாளம் தெரியாத இருவரால் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
சந்தேகநபர்களால் இலக்கு வைக்கப்பட்ட நபர் அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில் விருந்துபசாரத்தில் பங்கேற்றிருந்தவர்கள் துப்பாக்கிதாரிகள் மீது கற்களை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்தநிலையில் விருந்துபசாரத்தில் இருந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதுடன் இதன்போது இருவர் காயமடைந்தனர்.
குறித்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களில் ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.