கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள பெரும்தொகை பால்மா
கொழும்பு துறைமுகத்தில் 25 நாட்களாக 4 இலட்சம் கிலோகிராம் பால் மா அடங்கிய 17 கொள்கலன்கள் தேங்கிக் கிடப்பதாக பால் மா இறக்குமதி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கலாநிதி லக்ஷ்மன் விஜேசூரிய தெரிவித்தார்.
இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டின் அனுமதி மறுக்கப்பட்டதன் காரணமாக இவ்வாறு அவை துறைமுகத்தில் தேங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.
அதன்படி துறைமுகத்தில் 25 நாட்களாக 4 இலட்சம் கிலோகிராம் பால் மா அடங்கிய 17 கொள்கலன்கள் காணப்படுகின்றன.
40 இலட்சம் தாமதக் கட்டணம்
இந்நிலையில் 17 பால்மா கொள்கலன்களை விடுவிப்பதற்காக 40 இலட்சம் ரூபா தாமதக் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இதன் காரணமாக பால் மாவின் விலையை எதிர்காலத்தில் மேலும் அதிகரிக்க நேரிடலாம்.
கப்பலில் பால் ஏற்றும் போது ஒரு சட்டமும், நடுக்கடலில் திரும்பும் போது மற்றொரு சட்டமும், கப்பல் கொழும்பு துறைமுகத்தை நெருங்கியதும் மற்றுமொரு சட்டமும் அமுல்படுத்தப்படுவதனால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்.