பட்டப்பகலில் வீதியில் பெண்ணுக்கு அரங்கேறிய கொடூர சம்பவம்! சிசிரிவி காட்சி
பெண் ஒருவர் வீதியில் நடந்து சென்றபோது, ஒரு நபர் திடீரென பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுவிட்டு தப்பியோடிச் செல்லும் சம்பவம் அரங்கேறியுள்ளது.
பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்தில் பட்டப்பகலில் ஹிஜாப்-பர்தா அணிந்த பெண்ணிடம், ஒருவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சிசிரிவி காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.
அதில் பர்தா அணிந்த பெண் தெருவில் நடந்து செல்லும்போது, அவருக்கு பின்புறத்தில் இருந்த அடையாளம் தெரியாத நபர் திடீரென அவரை இறுக்கி அணைத்துக்கொண்டார்.
அந்த கயவரிடமிருந்து விடுபட அந்த பெண் மிகுந்த சிரமப்பட்டார். பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுவிட்டு அந்த நபர் தப்பியோடிச் செல்வது பதிவாகியுள்ளது. இதனை கண்டித்தும், பாகிஸ்தானில் பெண்களின் பாதுகாப்பு குறித்தும் கேள்வி ஏற்பட்டுள்ளது.
سیکٹر آئی 10 میں حوس کے پجاری درندہ صفت شخص کی حرکت دیکھیں جن محترمہ کےساتھہ یہ واقع ہواہے انھوں نے یہ ویڈیو مجھے سینڈ کی ہے پولیس کی طرف سےفی الحال کوئی کاروائی نہیں کی گئی افسوس@ICT_Police @javerias @HamidMirPAK @arsched @Wabbasi007 @PalwashaAbbasi0 @Islaamabad @waqasabbasi85 pic.twitter.com/HFFE5Aesey
— Ehtesham Ali Abbasi⚔ (@ehtashamabbasi) July 17, 2022
பாகிஸ்தானில் பகலில் கூட ஒரு பெண் தனியாக தெருவில் நடந்துபோக முடியவில்லை என்ற உண்மை இன்னும் இந்த சமுதாயத்தில் பெண்கள் நிலைமையைப் புலப்படுத்துகிறது என சமூக வலைதளங்களில் மக்கள் பேசி வருகின்றனர்.
பாலியல் ரீதியான தொந்தரவு அடிப்படையில் வெளியான அறிக்கையில், பாகிஸ்தானில் உள்ள 70 சதவீதத்துக்கு மேல் பெண்கள் பணிபுரியும் இடங்களில் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகின்றனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அந்த எண்ணிக்கை குறையாமலேயே இருக்கிறது.
பெண்கள் உரிமைக்காக வேலைசெய்யும் வைட் ரிப்பன் பாகிஸ்தான் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் சேகரித்த தகவலின் படி, 2004ம் ஆண்டிலிருந்து 2016ம் ஆண்டு வரை 4,734 பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து இந்த வருடம் பாகிஸ்தான் அரசு, பெண்கள் பணிபுரியும் இடங்களில் பாலியல் தொந்தரவு பாதுகாப்பு சட்டத்தை மேம்படுத்தியுள்ளது.