8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஓமானை வீழ்த்தி சிம்பாப்வே வெற்றி
கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெற்ற ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ண குழு-பி லீக் ஆட்டத்தில், ஓமான் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சிம்பாப்வே அணி அபார வெற்றி பெற்றது.
இப்போட்டியில் முதலில் துடுப்பாடிய ஓமான் அணி, சிம்பாப்வேயின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் 19.5 ஓவர்களில் 103 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

ஓமான் தரப்பில் அதிகபட்சமாக வினாயக் சுக்லா 28 ஓட்டங்களை எடுத்தார். சிம்பாப்வே பந்துவீச்சாளர்கள் பிளெஸ்ஸிங் முசரபானி மற்றும் ரிச்சர்ட் ங்கரவா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
104 ஓட்டங்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய சிம்பாப்வே அணி, பிரையன் பென்னட்டின் அதிரடியான 48 ஓட்டங்களின் உதவியுடன் 13.3 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை இழந்து 106 ஓட்டங்களை எடுத்து வெற்றியை உறுதி செய்தது.
ஓமான் தரப்பில் சுப்யான் மெஹ்மூத் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.