மகிந்தவை காண கால்டன் இல்லத்தில் எதிர்க்கட்சி முக்கியஸ்தர்
ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார்.
தங்காலை கார்ல்டன் இல்லத்துக்குச் சென்ற ஹேஷா விதானகே, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் நலம் விசாரித்துவிட்டு சுமார் 15 நிமிடங்கள் அவருடன் கலந்துரையாடியுள்ளார்.
ஹேஷா விதானகே சென்றபோது இன்முகத்துடன் அவரை வரவேற்ற, மஹிந்த ராஜபக்ஷ, "நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள்? வீட்டிற்குச் செல்கிறீர்களா?" என்று கேட்டார். "ஐயா, நான் உங்களைப் பார்க்க வந்தேன்.
திலீப் அண்ணனும் வந்தார். உங்களைப் பார்க்கவே வந்தேன்," என்று ஹேஷா விதானகே கூறினார். "நீங்கள் நல்ல அரசியல் பணிகளைச் செய்கிறீர்கள்.
நீங்கள் இளமையாக இருக்கும்போது அப்படித்தான் பணியாற்ற வேண்டும். அதே வழியில் அரசியல் பணிகளையும் பொது சேவையையும் தொடர்ந்து செய்யுங்கள்.
அது நல்லது," என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவரிடம் கூறியுள்ளார்.