ஷிரந்தி ராஜபக்சவுக்கு திறந்த இதய அறுவைச் சிகிச்சை
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவுக்கு இன்று (27) மாலை திறந்த இதய அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
கிரிஷ் நிறுவன விவகாரம் தொடர்பான வழக்கு இன்று கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இந்தத் தகவலை அவர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ஷிரந்தி ராஜபக்ச தற்போது இதயத் துடிப்பு சீராக்கும் கருவி (Pacemaker) பொருத்தப்பட்ட நிலையில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விசேட மருத்துவ நிலைமையைக் கருத்திற்கொண்டு, கிரிஷ் நிறுவன விவகாரத்தில் சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ள நாமல் ராஜபக்சவுக்கு பிணை வழங்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனையடுத்து, குறித்த விடயத்தைப் பரிசீலிப்பதற்காக வழக்கை நாளை (28) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.