சிவப்பு பிடியாணை ; டுபாயில் தலைமறைவாக இருந்த பெண் நாட்டுக்கு
சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த சந்தேகநபரான அச்சினி என்று அழைக்கப்படும் அனுஷா லக்மாலி துபாயிலிருந்து அழைத்துவரப்பட்டுள்ளார்.
டி.கே.ஜி.கபில"கஜ்ஜா" கொலை வழக்கு விசாரணைக்கு அத்தியாவசியமாகத் தேவைப்பட்ட அசினி என்றழைக்கப்படும் அனோஷா லக்மாலி என்ற பெண், டுபாயில் தலைமறைவாக இருந்தபோது அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

"கஜ்ஜா" மற்றும் பிள்ளைகள் கொலை
இந்நிலையில், இலங்கையின் சிறப்பு பொலிஸ் குழுவொன்று அவரைப் பொறுப்பேற்று, 10/27 அதிகாலை காட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளது.
34 வயதான இந்தப் பெண் மிக்தெனிய, கட்டுவன பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதோடு, இவர் "கஜ்ஜா" என்பவருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தவர் என்பது பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
. இவர் "கஜ்ஜா"வுக்கு இறுதி தொலைபேசி அழைப்பையும், இறுதி குறுஞ்செய்தியையும் (Message) அனுப்பியுள்ளார். மேலும், "பேக்கோ சமன்" என்பவரின் வழிகாட்டலின் பேரில், உணவருந்துவதற்காக "கஜ்ஜா" மற்றும் அவரது இரு பிள்ளைகளையும் உணவகம் ஒன்றுக்கு அழைத்ததும் இந்தப் பெண்ணே என்பது பொலிஸ் விசாரணைகளில் மேலும் தெரியவந்துள்ளது.
அவ்வாறு உணவருந்த வந்த "கஜ்ஜா" மற்றும் அவரது இரு பிள்ளைகளும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தனர்.அசினி 10/27 அதிகாலை 05:20 மணிக்கு டுபாயிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான UL-226 என்ற விமானம் மூலம் காட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
அங்கு விமான நிலைய குற்றப்புலனாய்வுத் துறை அதிகாரிகளால் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர், பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கொழும்பு குற்றப்புலனாய்வுத் துறை தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.